பொன்னாங்குடியில் சப்பர திருவிழா

திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் பொன்னாங்குடி சவேரியார் சர்ச்சில் நடந்த சப்பரத் திருவிழாவில் கிறிஸ்தவர்களுடன் ஹிந்துக்களும் பங்கேற்றனர்.

புனித சவேரியார், புனித அருளானந்தர் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றிய சிறப்பை பெற்ற இந்த சர்ச்சில் ஆண்டு தோறும் ஆடியில் தேர் பவனி என்ற சப்பரத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

ஜூலை 18ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி மாலை சிறப்பு கூட்டு திருப்பலி, ஆராதனை நடந்தன. தேர்பவனி 9, 10ம் நாட்களில் நடந்தது.

சர்ச் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் சர்ச்சில் இருந்து புறப்பட்டு நாட்டார்கள், ஹிந்துக்களை சந்தித்து நெற்றியில் சந்தனமிட்டு விழாவிற்கு வரவேற்றனர்.

தொடர்ந்து அழைப்பை யேற்று மாலை, சீர் வரிசையுடன் ஹிந்துக்கள் புனித சவேரியார் சர்ச்சிற்கு சென்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.

திருப்புத்துார் அமல அன்னை சர்ச் பாதிரியார் அற்புதஅரசு, புதுக்கோட்டை ஆனந்த பிரபு, மதுரை மரிய செல்வம் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட முதல் சப்பரத்தில் காவல் துாதர் மைக்கேல் சம்மனசு, இரண்டாம் சப்பரத்தில் புனித சவேரியார், மூன்றாம் சப் பரத்தில் புனித ஆரோக்கிய மாதா உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டது.

சொரூபங்களுக்கு புனித நீர் தெளித்து பூஜைகளுக்குப் பின் தேர்பவனி துவங்கியது. சப்பரங்களை ஹிந்துக்கள் துாக்கி ஊர் வலமாக முக்கிய வீதி களின் வழியாக சென்றனர்.

இக்கிராமத்தில் சில கிறிஸ்தவ குடும்பங்களே உள்ள நிலையில், ஹிந்துக்கள் அதிகமானோர் அவர் களுடன் 300 ஆண்டு களாக மதநல்லிணக்கத் துடன் இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.

Advertisement