திருக்கோஷ்டியூர் ஆடிப்பூரத் தேரோட்டம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

சிவகங்கை சமஸ் தானத்தை சேர்ந்த இக் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள், பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

ஜூலை 25ல் ஆண்டாள், பெருமாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மாலையில் சூர்ணாபி ேஷகம் நடைபெற்றது.

நேற்று ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 10:00 மணிக்கு ஆண்டாள்,பெருமாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4:50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

நாளை காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்த வாரி, இரவில் தங்க பல்லக்கில் ஆண்டாள், பெருமாள் எழுந்தருளி ஆஸ்தானம் எழுந் தருளலுடன் உற்ஸவம் நிறைவடைகிறது.

Advertisement