சக்தி கல்லுாரியில் சதுரங்கப் போட்டி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டுத்துறை சார்பாக சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு கியூன்ஸ் கிராப்ட் ஓபன் டோர்னமென்ட் நடந்தது. சக்தி கல்வி குழுமத் தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார்.

கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் டெசிசன் செஸ் அகாடமி மூத்த தேசிய நடுவர் கருணாகரன் தொடங்கி வைத்தார். மீனாட்சி முதல் இடும், சிபிதா இரண்டாம் இடம் பிடித்தனர். மாணவிகளுக்கு கல்லுாரி இயக்குனர் கவின் குமார் விருது , சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாண்டியராஜன் செய்திருந்தனர்.

Advertisement