'தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்'

கரூர், தமிழ்ச்செம்மல் விருது பெற ஆக., 29க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து வழங்கப் படுகிறது. நடப்பு ஆண்டில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு https://tamilvalarchithurai.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, ஆற்றிய தமிழ்ப்பணி ஆய விபரங்களுடன் ஆக., 29க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பதை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement