கதண்டு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

குளித்தலை, குளித்தலை அடுத்த, மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்தவர் வேலுசாமி, 40, கூலித் தொழிலாளி.
இவர் கடந்த, 26ம் தேதி காலை 8:15 மணியளவில், கட்டளை கிழக்கு வாய்க்கால் நடுக்கரை திருக்காம்புலியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.அப்போது, மரத்தில் இருந்து வெளியே வந்த கதண்டு , வேலுசாமியின் முகம், உடல் முழுவதும் கடித்தது.

இதில் பாதிக்கப்பட்ட அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இறந்தார்.
இது குறித்து, மாயனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement