'குத்தா பாபு'வின் மகன் 'டாக் பாபு' பீஹாரில் இருப்பிட சான்றால் சர்ச்சை

பாட்னா : பீ ஹாரில், வளர்ப்பு நாயின் பெயரில் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டிரு ப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது.


'டிஜிட்டல்' கையொப்பம் இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆதார், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நம்பகமானவையாக ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், 64 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது.




இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பார்லி.,யிலும் இந்த விவகாரம் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் பீஹாரில், 'டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாயின் புகைப்படத்துடன் கூடிய வசிப்பிட சான்றிதழ் வழங்கப்பட்ட தகவல் ஆ தாரத்துடன் வெளியாகியுள்ளது.



பாட்னா அருகே உள்ள மசவுரியில் உள்ள வளர்ப்பு நாய்க்கு இந்த ஆவணம் வழங்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அந்த ஆவணத்தில் நாயின் தந்தை பெயர், 'குத்தா பாபு' எனவும், தாயின் பெயர் 'குட்டியா தேவி' எனவும் இடம் பெற்றுள்ளது. மேலும் கவுலிசக், வார்டு எண் 15 என்ற விலாசத்துடன் அந்த இருப்பிட சான்றிதழில் தகவல்கள் இடம் பெற்று உள்ளன.



இதில், மேலும் அதிர்ச்சியடைய வேண்டிய விஷயம் என்னவெனில், வருவாய் அலுவலர் முராரி சவுஹான் என்பவரின், 'டிஜிட்டல்' கையொப்பமும் அதில் இடம் பெற்றிருப்பது தான்.



இதன் மூலம், 'டிஜிட்டல்' ஆவணங்களின் நம்பகத்தன்மையும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.



தவிர, இந்த சான்றிதழ் விவகாரம், மாநில அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வலுவாக குரல் எழுப்பவும் அடித்தளமிட்டுள்ளது.



காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தலில் பா.ஜ.,வுக்காக இந்த நாய் வரிசையில் நின்று ஓட்டு போடும். இல்லாவிட்டால், அவர்கள் 'டாக் பாபு'வை வேட்பாளராக நிற்க வைப்பர். அதுமட்டுமின்றி, 'டாக் பாபு' வெற்றிக்காக பா.ஜ., தொண்டர்களும் ஓட்டு போடுவர் ' என, குறிப்பிட்டுள்ளது.



நடவடிக்கை இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என பீஹார் அரசு தெரிவித்துள்ளது.



'டாக் பாபு' பெயரில் இருப்பிடச் சான்று வழங்கிய அதிகாரி, 'கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்' மற்றும் விண்ணப்பித்தவருக்கு எதிராக போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மசவுரியின் துணை கோட்ட அலுவலர் விசாரணை நடத்தி, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையின்படி தவறு இழைத்தவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பீஹார் அரசு எச்சரித்துள்ளது.




இரு வாரங்களுக்கு முன், பீஹாரின் முங்கர் மாவட்டத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்தது.



அப்போது இருப்பிட சான்று கேட்டு விண்ணப்பித்த சோனாலிகா குமாரி என்பவரின் புகைப்படத்துக்கு பதிலாக, 'சோனாலிகா' டிராக்டரின் படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement