பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
திருச்சி : திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் வசிப்பவர் மூக்கையன். காய்கறி வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி. துப்புரவு பணியாளர். இவர்களின் மகள் கனிஷ்கா, பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார் நேற்று காலை தம்பதியர் தங்களது பணிக்கு சென்று விட்டனர்.
பின்னர் சீருடை அணிந்து பள்ளிக்கு கிளம்பிய கனிஷ்கா, தன் வீட்டில் மின்விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால், சந்தேகம் அடைந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே கனிஷ்கா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
-
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
-
எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை
-
நீரேற்று மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த என்.எல்.சி., விருப்பம்
-
நிமிஷாவின் 'துாக்கு' ரத்து? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு!
Advertisement
Advertisement