ராமநாதபுரம் இளைய மன்னர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

சென்னை: ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி, நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வீட்டில், அவரது முன்னிலையில், நாகேந்திர சேதுபதி, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு அ.தி.மு.க., உறுப்பினர் அட்டையை பழனிசாமி வழங்கினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயலர் முனியசாமி உடனிருந்தார்.

கடந்த ஜூனில் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த, இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், மன்னர் குடும்பத்தின் மற்றொரு வாரிசான நாகேந்திர சேதுபதி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.

Advertisement