மிரட்டுவது தான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்: பா.ஜ.,

1

சென்னை: 'தி.மு.க., எம்.எல்.ஏ., உதயசூரியன் இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார். இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:



கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் உள்ள கிராமத்தில், உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற, சங்காரபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியனிடம், 'சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்' என, அப்பகுதி இளைஞர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


ஓட்டளித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு, பதில் சொல்லி பழக்கம் இல்லாத தி.மு.க.,வை சேர்ந்த உடன்பிறப்புகள், அந்த இளைஞர்களை அடக்க முற்பட்டு உள் ளனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியனோ, அந்த இளைஞர்களை தகாத வார்த்தகைளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.




அவரின் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.



கடந்த நான்கு ஆண்டுகளாக, கால் வை க்கும் இடங்களில் எல்லாம், கையில் கிடைக்கும் துறைகளில் எல்லாம், ஊழல் செய்து விட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல், மக்களை சென்று நலம் விசாரித்தால், இதுதான் நடக்கும். கோடிகோடியாக மக்கள் பணத்தை கொள்ளை அடித்த, தி.மு.க., அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement