நீதிமன்றம் எதிரில் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி... மந்தம்; திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் தொடரும் 'டிராபிக் ஜாம்'

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 2017ம் ஆண்டு திறக்கப்பட்டது. நகர எல்லைக்கு அருகில் உள்ள இந்த நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மார்க்கத்திலிருந்து வரும் போது, சர்வீஸ் சாலை இல்லாததால், பலர் சாலையைக் கடக்கும் போது, கோர்ட ஊழியர், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் விபத்தில் சிக்கி இறந்தனர்.
திண்டினம் அருகே ஜக்காம்பேட்டை வரை உள்ள சர்வீஸ் சாலையை நீதிமன்றம் வரை நீட்டித்து தர வேண்டும் என வழக்கறிஞர்கள் நடத்திய பல கட்டபோராட்டங்களுக்குப்பின், நீதிமன்றத்திற்கு இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு சர்வீஸ் சாலை போடப்பட்டது.
இதற்கிடையே தொடர் விபத்துகள் நடக்கும் இடங்களில் தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைத்துறைஆணையம் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தியது. அதில், ஜக்காம்பேட்டை நீதிமன்றம் எதிரே அதிகளவில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நகாய் சார்பில் திண்டிவனம் நீதிமன்றம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக 20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து, மயிலம் கூட்டேரிப்பட்டில் உள்ளது போல் ஜக்காம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்த பணி ஓராண்டிற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாலம் கட்டும் பணி மந்தமாக நடைபெறுவதால் குறித்த காலக்கெடுவிற்குள் கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ் சாலை யில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், வாகனங்கள் செல்வதற்காக ஒரு பக்கம் சாலையை மூடிவிட்டு, மற்றொரு பக்க சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது.
இதனால் வார இறுதி நாட்களில் ஜக்காம்பேட்டையில் திண்டிவனம் - விழுப்புரம் மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரர் தரப்பில் கேட்டபோது, ஜக்காம்பேட்டையில் பாலம் கட்டும் பணி 3 மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த இந்த சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியில் குறைவான பணியாளர்கள், தளவாடங்களைக் கொண்டு நடைபெறுவதால், பணிகள் முடிவதற்கு இன்னும் வெகு நாட்களாகும் நிலை உள்ளது.
பணியை விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு