முதல் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் 5 இடங்கள் தேர்வு
கொழும்பு; இலங்கையில் முதல் அணுமின் நிலையம் அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தது. இதற்கு, 2010ம் ஆண்டில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பின்னர், 2019ல் அணுசக்தி திட்ட அமலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அணுமின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்த, சர்வதேச அணுசக்தி முகமை, 2-022ல், பல பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, முகமையின் நிபுணர் குழு, இலங்கையில், கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை, உள்கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு செய்தது. முகமை பணிக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை செயல்படுத்துவதில், இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிபுணர்கள் பாராட்டினர்.
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, நாட்டின் முதல் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, இலங்கை அரசு ஐந்து இடங்களை பரிந்துரை செய்தது. அவற்றை, சர்வதேச அணுசக்தி முகமை ஏற்றுக் கொண்டுள்ளது.
@block_B@ உலகின் முதல் அணுமின் நிலையம் முந்தைய சோவியத் யூனியனின் ஒப்னின்ஸ்க் பகுதியில், 1954ல் செயல்படத் துவங்கியது. இந்தியாவில், முதல் அணுமின் நிலையம் மஹாராஷ்டிரா மாநிலம் தாராபூரில் 1969ல் அமைக்கப்பட்டது.block_B
மேலும்
-
நீதிபதியை விமர்சித்த வக்கீலுக்கு எதிராக நடவடிக்கை: தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்