அமைச்சர் துரைமுருகன் பதவி விலக கோரி தீர்மானம்

ஈரோடு: கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தலைமையில், ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
நடப்பாண்டு மேட்டூர் அணை நான்காவது முறை நிரம்பி, 1 லட்சம் கன அடி நீர் கடலில் வடிகிறது. கடைமடைக்கு உரிய நீர் செல்லவில்லை. பவானிசாகர் அணை நிரம்பி, 20,000 கன அடிக்கு மேல் பவானி ஆற்று நீர் கடலில் வீணாகிறது. கீழ்பவானி பாசனம் பெறும், 2.07 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வறண்டுள்ளன.
அமராவதி அணையும் நிரம்பி கடலுக்கு உபரி நீர் செல்கிறது. ஆழியாறு அணை நிரம்பி, அரபிக்கடலுக்கு செல்கிறது. ஆனாலும், கொங்கு மண்டல ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் காய்ந்துள்ளன.
தவறான நீர் நிர்வாகம், திட்டமிடாமல் தண்ணீரை கடலுக்கு வீணாக்கிய செயலுக்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும். அதுவே, அவருக்கும், தமிழகத்துக்கும் நல்லது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும்
-
மேயர்கள் பதவி இழப்பை தடுக்க தி.மு.க., தலைமை ரகசிய உத்தரவு
-
இதய ஆப்பரேஷனுக்கு பல மாதமாக காத்திருக்கும் நோயாளிகள்; அரசு மருத்துவமனைகளில் அவலம்
-
'ஆப்பரேஷன் வி'க்கு பண்ருட்டி 'மூவ்' ; விஜய் அணியில் பன்னீர், அன்புமணி?
-
போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
-
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை