நாக, கருட பஞ்சமியில் பக்தர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு



தர்மபுரி, நாக பஞ்சமி நாளில், நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, பரிகாரம் தேடுகிறார்கள். அரச மரத்தடியிலுள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதும், புற்றுள்ள இடங்களில் பால் ஊற்றி வழிபடுவதும், நாக பஞ்சமி நாளில் செய்யப்படும் முக்கிய வழிபாடுகளாகும். இதில், தர்மபுரி அருகே, செந்தில் நகரிலுள்ள புத்து நாகர் கோவிலில் திரளான பெண்கள் புற்றில் பால், முட்டை வைத்து வழிபட்டனர்.

அதேபோல், கருட பஞ்சமியையொட்டி, இலக்கியம்பட்டியில் உள்ள வாராஹி அம்மன் கோவிலில் நடந்த, சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* பாப்பாரப்பட்டி அரச மரத்தெருவில் வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நாகபஞ்சமி -கருட பஞ்சமி விழா நேற்று நடந்தது. வரசித்தி விநாயகருக்கு மகா அபிஷேகம் அலங்காரம் நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள தொன்மை வாய்ந்த அரசமரமாக வீற்றிருக்கும் மகாதேவன்- வேம்புவாக வீற்றிருக்கும் மகாசக்தி ஆகியோருக்கு, அரசு- வேம்பு கல்யாணம் நடத்தப்பட்டது. நாகதேவதைக்கு பக்தர்கள் கைகளால் பாலாபிஷேகம், குங்குமம், மஞ்சள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். ராகு, கேது தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement