பிரபல பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்; போலீசார் வழக்குப்பதிவு

கொச்சி: கேரளாவில் பிரபல ராப் பாடகர் வேடன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்Fப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார். அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்களின் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
அண்மையில் புலி பல் சர்ச்சையில் சிக்கிய இவர் மீது தற்போது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பெண் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது; நான் வேடனின் ரசிகை. டாக்டர் தொழில் செய்து வருகிறேன். என்னுடன் வேடனுக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் சமூக வலைதளப் பதிவு குறித்து பேசுவதற்காக சென்ற போது முதல்முறையாக, என்னை வேடன் பாலியல் வன்கொடுமை செய்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2021ம் ஆண்டு முதல் 2023 வரையில் தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்தார். பின்னர் என்னை ஏமாற்றி விட்டார். மேலும், என்னிடம் பணமும் பெற்றுள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





