குடிநீர் வசதி கேட்டு கிள்ளையில் மறியல்

கிள்ளை : கிள்ளையில், சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் ந டத்தினர்.

கிள்ளை, மானம்பாடி மற்றும் சிங்காரகுப்பம் பகுதியில், சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு அப்பகுதி மக்கள் வி.சி., கட்சி நகர செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், மானம்பாடியில் நேற்று காலை 10:40 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த, தாசில்தார் கீதா, செயல் அலுவலர் மலர், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று, 11:20 மணிக்கு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக கிள்ளை-பரங்கிப்பேட்டை சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement