வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே, செல்லம்பாளையம் தளபதி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 51. இவரது மனைவி கவிதா, நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு பூ பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆறுமுகம் வீட்டை பூட்டி விட்டு, மனைவியிடம் சாவியை கொடுத்துவிட்டு நம்பியூருக்கு சென்றுள்ளார். கவிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையில் துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய், கால் பவுன் தங்க கம்மல், இரண்டு செட் வெள்ளி கொலுசு ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement