கோபியில் இன்று முதல் 2 நாள் மகளிர் குழு பொருள் விற்பனை

ஈரோடு, ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ், மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் இன்றும் (31), நாளையும் (ஆக., 1) கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லுாரியில் (தன்னாட்சி) கல்லுாரி சந்தை நடக்க உள்ளது.

மகளிர் குழுவினர் தயாரித்த கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டு புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, டிசைன் மிதியடிகள், பேன்சி பொருட்கள், காட்டன் பை, சணல் பை, மரச்செக்கு எண்ணெய், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை தட்டு, உணவு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மகளிர் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி பயன் பெறலாம்.

Advertisement