திட்டக்குடி தொகுதியில் போட்டியிட காங்., ஆசை
த மிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026ல் முடிகிறது. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் கட் சி, கூட்டணி கட்சிகளை மாற்றுக்கட்சிகளுக்கு செல்லவிடாமல் தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால், தி.மு.க., வின் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர். ஆனால், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர் எப்பாடுபட்டாவது தங்களின் விருப்ப தொகுதியை கேட்டு வாங்க வேண்டும் என அந்தந்த கூட்டணி கட்சியினர் அவரவர்களின் கட்சி தலைமைக்கு அழுத்தம் தர ஆரம்பித்துள்ளன ர்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (தனி) தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளவரும், உள்ளூரில் பல முக்கிய நிர்வாகிகள் சிலரும் தங்களுக்கு 'சீட்' வழங்க வேண்டும் என ஆசைபட்டு தங்களின் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து,தி.மு.க., அர சிடம் பேசுமாறு கூறுகின்றனர்.
திட்டக்குடி தொகுதியில் அமைச்சர் கணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தொகுதிக்கு காங்., நிர்வாகிகளும் போட்டியிட குறி வைத்துள்ளதால் தி.மு.க.,வினர் 'ஷாக்' காகி உள்ளனர்.
மேலும்
-
மகன் இறந்த துக்கம்: தம்பதி தற்கொலை
-
அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.20.91 லட்சம் மோசடி
-
முதல்வர் ஸ்டாலின் படம் சாலையில் வீச்சு கெங்கவல்லி தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி
-
ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
-
குழந்தையை கடத்த முயன்ற பெண்ணுக்கு கும்மாங்குத்து
-
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை: மக்கள் பீதி