ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
வாணியம்பாடி:கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் ராஜேஷ், 32. இவரது மனைவி ரோகினி, 30. தம்பதிக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் வசிக்கும் தந்தையை பார்க்க, மனைவி, குழந்தையுடன், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜேஷ் சென்னை புறப்பட்டார்.
நேற்று காலை, 8:00 மணிக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் சென்றபோது, ராஜேஷ், ரோகினி இருவரும் குழந்தையை சீட்டில் உட்கார வைத்து விட்டு, ரயிலிலுள்ள கழிப்பறைக்கு சென்றனர். ராஜேஷ் திரும்பிய நிலையில், ரோகினி வரவில்லை. கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் ரயில், காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் சென்றது.
அங்கு, ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் ரயில் தண்டவாளம் வழியே, ஜோலார்பேட்டை வரை தேடி சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து ரோகினி தவறி விழுந்து தண்டவாளத்தில் பலியாகி கிடந்தது தெரிந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக் கின்றனர்.
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்