குழந்தையை கடத்த முயன்ற பெண்ணுக்கு கும்மாங்குத்து
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே குழந்தையை கடத்த முயன்ற பெண்ணுக்கு, பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், புதுக்கோட்டை பஞ்.,குட்பட்ட ராஜகவுண்டனுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 34. இவரது மனைவி புனிதா, 29; கூலி தொழிலாளிகள். இவர்கள் மகள் வைஷ்ணவி, 5; அங்கன்வாடி பள்ளியில் படிக்கிறார்.
நேற்று காலை வழக்கம் போல், ஈஸ்வரனும், புனிதாவும் கூலி வேலைக்கு சென்றனர். குழந்தை வைஷ்ணவி, அப்பகுதி அங்கன்வாடி பள்ளிக்கு வீட்டிலிருந்து நடந்து சென்ற போது, குழந்தையை, 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடத்த முயன்றார். அப்போது, குழந்தை வைஷ்ணவி அழுதுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குழந்தையை மீட்டு, கடத்த முயன்ற பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து, திருப்பத்துார் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அப்பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்