கத்தியுடன் திரிந்த இரண்டு பேர் கைது
வில்லியனுார் : வில்லியனுார் அருகே கொலை செய்ய கத்தியுடன் திரிந்த டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராதா மகன் கேசவன், 33. இவருக்கு இரண்டு மனைவிகள். டிரைவரான இவர், சென்னையில் முதல் மனைவியுடன் தங்கி, கார் ஓட்டி வருகிறார்.
தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டாவது மனைவியுடன் அதே பகுதியை சேர்ந்த நபருடன் உறவு வைத்திருப்பதாக கேசவனுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, சென்னையில் இருந்து தனது நண்பர் சூர்யா, 22, என்பவருடன் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அந்த நபரை இரவு 11:00 மணியளவில் நண்பருடன் சேர்ந்து கத்தியுடன் கொலை செய்யும் நோக்கத்தில் துரத்தினர்.
தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போதுகத்தியுடன் திரிந்த கேசவன் மற்றும் சூரியாவை கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
மகன் இறந்த துக்கம்: தம்பதி தற்கொலை
-
அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.20.91 லட்சம் மோசடி
-
முதல்வர் ஸ்டாலின் படம் சாலையில் வீச்சு கெங்கவல்லி தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி
-
ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
-
குழந்தையை கடத்த முயன்ற பெண்ணுக்கு கும்மாங்குத்து
-
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை: மக்கள் பீதி