இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அதிபர் டிரம்ப் தகவல்

10

வாஷிங்டன்: பரஸ்பர வரிகளை விதிக்க காலக்கெடுவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, "இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் கூறியதாவது;
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவுடனான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றால், இந்தியாவுக்கு 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.



இந்தியா ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறது. எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும்.


ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்ததைக் கருத்தில் கொண்டு, இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement