தென்மாவட்ட கராத்தே போட்டி

மதுரை : தென்காசி ஜாய் மெட்ரிக் பள்ளியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் தென் மாவட்டங்களுக்கு இடையிலான கராத்தே, சிலம்பப்போட்டி நடந்தது.

இதில் திருமங்கலம் ஷால்மன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஜான் ஜெரெமியா, வைஷ்ணவி, சமீரா மாரி, சபரி வாசன் முதல் பரிசு பெற்றனர். சோபுக்காய் கோஜ்ரியோ கராத்தே பள்ளி இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ் குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குவேல், பயிற்சியாளர்கள் அமுதா, அவினாஷ், சபரி, கவின் ராம், ரோஹித் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் விஜய் மாணவர்களை பாராட்டினார்.

Advertisement