இலங்கை அகதிகளுக்கு திருமண பதிவு செய்ய அனுமதி

சிதம்பரம்:கடலுார் மாவட்டத்தில் இலங்கை அகதிகள், தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர்.

கடலுார் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் ஆகிய 4 இடங்களில் அகதிகள் முகாம் ஏற்படுத்தி, இலங்கை அகதிகளாக 430 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அகதிகளின் திருமண பதிவை கடந்த 2018ம் ஆண்டு, அப்போதையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், ஈழ எழுதிலியர் மறுவாழ்வு கழகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்ததின் பேரில், பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., ஆலிவர் பொன்ராஜ், தடை உத்தரவை விலக்கி, தமிழகம் முழுதும் இலங்கை அகதிகள், திருமணத்தை பதிவு செய்து உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 25, 26ம் தேதி, தமிழகம் முழுதும் நடந்த முகாமில், இலங்கை அகதிகள் திருமண பதிவை பதிவு செய்தனர். கடலுார் மாவட்டத்தில் 4 முகாம்களில் இருந்து 32 ஜோடிகள் திருமணத்தை பதிவு செய்தனர்.

Advertisement