மாநில அளவிலான சதுரங்க போட்டி

கடலுார்:கடலுார் கிரவுன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இரண்டாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக இருதயா பெப்ஸலைன், சாந்தி பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தலைமை நடுவராக கபில் போட்டியை நடத்தினார். கிரவுன் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ரூபவேல், போட்டியை ஒருங்கிணைத்தார். அதில் 10 பேர் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் பாண்டியன், வினோத், சண்முகம் ஆகியோர் பங் கேற்றனர்.

Advertisement