1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்

சென்னை: ''நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 அதுமாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது'' என தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் த.வெ.க., உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற விஜய், ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு'' என்ற செயலியை வெளியிட்டு, கட்சியினர் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். த.வெ.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததில் மகிழ்ச்சி என உறுப்பினர் அடையாள அட்டை பெற்றவர்கள் தெரிவித்தனர்.
மிக பெரிய தேர்தல்கள்
தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான மொபைல் ஆப்-ஐ வெளியிட்டு விஜய் பேசியதாவது: எல்லோருக்கும் வணக்கம், இதுக்கு முன்னாடி நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 அது மாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம், முதலில் இருந்தே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில், ஏற்கனவே வெற்றி பெற்று கொண்டு
இருந்தவர்களின் அதிகார பலம், அசுர பலம் எல்லாவற்றையும் எதிர்த்து நின்று
தான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள்.
சிம்பிள் லாஜிக்
@quote@எப்படி ஜெயித்தார்கள் என்று பார்க்கும் போது, அது சிம்பிள் லாஜிக் தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்று எல்லா மக்களை சந்தித்து இருக்கிறார்கள். அண்ணாதுரை சொன்னதை நானும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்quote
கற்றுக்கொள்
மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ். மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, இதனை சரியாக செய்தால் போதும், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் எல்லா குடும்பத்தினரையும் உறுப்பினராக சேர்த்து, நம்ம கண்டிப்பாக ஜெயிக்க முடியும். அதனால் தான் இந்த ஆப்-ஐ அறிமுகப்படுத்துவதில் ரொம்ப சந்தோஷம் படுகிறேன்.
வெற்றி நிச்சயம்
இதுக்கு அப்புறம் மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என்று தொடர்ந்து மக்களுடன் மக்களாக தான் இருக்க போகிறோம். இதனால், இப்பொழுது இருந்தே அதற்கான வேலையை தொடங்க வேண்டும். நாம் இருக்கிறோம், நமது உடன் மக்கள் இருக்கிறார்கள், இதுக்கு மேல என்ன வேணும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும்,வெற்றி நிச்சயம். நன்றி. இவ்வாறு விஜய் பேசினார்.











மேலும்
-
அறிவியல் துளிகள்
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; தாறுமாறாக வந்த லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர் பலி; 6 பேர் படுகாயம்
-
பிரிட்டன், பிரான்சை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு
-
ஹூப்பள்ளிக்கு 10 மெமு ரயில் மத்திய அரசிடம் வேண்டுகோள்
-
பெங்களூரின் கல்வி மையமாக சிவாஜி நகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் திட்டவட்டம்