அறிவியல் துளிகள்

01. 3 டி பிரின்டிங் வீடு கட்டப் பொதுவாக கான்க்ரீட் தான் பயன்படும். ஜப்பானில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் மண், சுண்ணாம்பு, இயற்கை நார் பொருட்களைக் கொண்டு 3டி பிரின்ட் முறையில் வீடு கட்டி சாதனை செய்துள்ளது.
Latest Tamil News
02. பூமியில் இருந்து 35 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு L98 - 59 என்று பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 2.8 மடங்கு பெரியது. தனது நட்சத்திரத்திலிருந்து இது அமைந்துள்ள தொலைவு, உயிர்கள் வாழ்வதற்குச் சரியான வெப்பநிலையைத் தருவதாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Latest Tamil News
03. நாசாவின் சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கி சமீபத்தில் 9 நட்சத்திர மண்டலங்களின் புகைப்படத்தை எடுத்துள்ளது. நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது பரவி வருகின்றன.
Latest Tamil News
04. மனிதர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வுக்கூடம் ஒன்றை 2045க்குள் நிறுவத் திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரியா கூறியுள்ளது.
Latest Tamil News
05. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகர் தீவின் சுந்தரவனக் காட்டில் ஒரு புதிய சிலந்தி இனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'பிராடுலா அகுமினாடா' என்று பெயரிட்டுள்ளனர்.

Advertisement