செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி

10

சென்னை; செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


@1brஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் காப்பாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2000 பேரை அந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது.

ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், வாழ்நாள் முடியும் வரை விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல் துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.


உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார்.

இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும். ஆனால், மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.


இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.

Advertisement