உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்

மாஸ்கோ; ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது சுனாமி என்ற வார்த்தையை உலக நாடுகள் மீண்டும் உச்சரிக்க வைத்திருக்கிறது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் என பல நாடுகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கின்றன. உச்சபட்சமாக ஜப்பானில் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர ஆரம்பித்து இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் உலக நாடுகளை அச்சுறுத்திய அல்லது பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் பற்றிய விவரங்கள் ஒரு பார்வை;
1. பியோபியோ(சிலி)
இங்கு 1960ம் ஆண்டு 9.5 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக இதுபோன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும்சுனாமியை அந்நாடு சந்தித்ததே இல்லை. இதில் மொத்தம் 1600 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். 2010ம் ஆண்டும் இதே பகுதியில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்த பேரழிவில் 500 பேர் உயிரிழந்தனர்.
2.அலாஸ்கா
இங்கு 1964ம் ஆண்டு ரிக்டரில் 9.2 என்ற அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் நீடித்தது. அமெரிக்க நாட்டின் வரலாற்றில் இதுவே சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவு, ஆளுயுர அலைகள், கடும் வெள்ளம் காரணமாக 130க்கும் அதிகமானோர் பலியாகினர்.
அதன் பின்னர் 1965ம் ஆண்டு 8.7 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 35 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகின. பெரியளவில் பாதிப்புகள் பதிவாகவில்லை.
3. சுமத்ரா(இந்தோனேசியா)
2004ம் ஆண்டு தென்கிழக்கு, தெற்காசியா, கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் 9.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,30,000 பேர். குறிப்பாக இந்தோனேசியாவில் மற்றும் 1,67,000 பேர் உயிரிழந்தனர். இந்தியா, இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதன் பாதிப்பு கடுமையாக இருந்தது.
2012ம் ஆண்டு மேற்கு சுமத்ராவில் ரிக்டர் அளவுகோலில் 8.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிய அளவு பாதிப்புகள் என்றாலும், 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்பை இந்த நிலநடுக்கம் ஏற்படுத்தியது.
4. டோஹோகூ (ஜப்பான்)
2011ம் ஆண்டில். 9.1 ரிக்டரில் நிலநடுக்கம் வடகிழக்கு ஜப்பானை தாக்கியது. சுனாமியால் புகுஷிமா அணு உலை முற்றிலும் சேதம் அடைந்தது. 18,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
5. கம்சட்கா(ரஷ்யா)
1952ம் ஆண்டு ரிக்டரில் 9 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நில நடுக்கத்தால் எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. 30 அடி உயரத்துக்கு ஹவாய் தீவில் சுனாமி அலைகள் எழுந்தன.
6. எஸ்மெரால்டஸ் (ஈக்வடார்)
1906ம் ஆண்டு நிலநடுக்கம் 8.8 ஆக பதிவானது. 1500 பேர் பலியாகினர். அதன் அதிர்வுகள் மத்திய அமெரிக்க கடற்கரை, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஜப்பானில் சுனாமி உருவாக காரணமாக அமைந்தது.
7. திபெத்
1960ம் ஆண்டு 780 பேர் நிலநடுக்கத்தால் உயிரிந்தனர். இங்கு 8.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. 12க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட, ஒரு கிராமமே ஆற்றில் மூழ்கி போனது.
