உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. தனக்கு எதிரான உள் விசாரணையின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 30) நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வர்மாவின் வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதங்களை முன் வைத்தார். அவர், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி விசாரணை குழு பரிந்துரைந்திருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதி வர்மாவின் நடத்தை குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
நீதிபதி வர்மாவிடம், அவர் ஏன் உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி, அவ்வப்போது அதை எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள் விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி வர்மா முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.











மேலும்
-
இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்துக்கு குறி; தொடரும் டிரம்பின் மிரட்டல்
-
வட இந்தியாவில் நிகழ்வது போல தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன் வேதனை
-
தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; முன்னாள் எம்.பி., பிரக்யா தாக்கூர் விடுதலை
-
தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!