இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்துக்கு குறி; தொடரும் டிரம்பின் மிரட்டல்

வாஷிங்டன்: ''ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலையில்லை. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவ் மிக மோசமான விவகாரத்திற்குள் நுழைகிறார்.'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாளை முதல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலையில்லை. இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேலும் கீழே கொண்டு செல்லட்டும்.
இந்தியாவுடன் அமெரிக்கா மிக குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதேபோல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து கிட்டத்தட்ட எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே இருக்கட்டும்.
மேலும் தான் இன்னும் அதிபர் என்று நினைக்கும் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவ் மிக மோசமான விவகாரத்திற்குள் நுழைகிறார். அவர் தனது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொருட்படுத்தவில்லை
முன்னதாக, டிரம்ப் புதிதாக விதித்து வரும் வரி விதிப்பு குறித்து, ரஷ்யா முன்னாள் அதிபர் மெட்விதேவ் கூறியதாவது: அதிபர் டிரம்ப் ரஷ்யாவுக்கு எச்சரிக்கையை விடுத்தார். இதன் விளைவுகளை எதிர்பார்த்து உலகம் நடுங்கியது. போர்க்குணமிக்க ஐரோப்பா ஏமாற்றமடைந்தது. ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை.
அதிபர் டிரம்ப் ரஷ்யாவுடன் விளையாட முயற்சிக்கிறார். ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகவும் போரை நோக்கிய ஒரு படியாகவும் உள்ளது. இவ்வாறு மெட்விதேவ் கூறியிருந்தார். மெட்விதேவ் வெளியிட்டுள்ள, இந்த பதிவிற்கு தான் இன்று டிரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.










மேலும்
-
பண மோசடி வழக்கு; அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் எரித்துக்கொலை; குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
-
ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்
-
சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்
-
ஆஸ்திக சமாஜத்தின் சார்பில் ஸ்ரீ மஹா ருத்ரம் நாம சங்கீர்த்தனம் துவக்கம்
-
வனத்துறை அலுவலகத்தில் விசாரணை: கைதி மர்ம மரணம்