மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; முன்னாள் எம்.பி., பிரக்யா தாக்கூர் விடுதலை

மும்பை: மாலேகானில் 2008ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ கோர்ட் விடுவித்தது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,சுவாமி அம்ருதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மொத்தமுள்ள, 323 சாட்சிகளில், 130 பேரிடம், விசாரணை கடந்த ஏப்ரலில் முடிவடைந்து விட்டது. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி இன்று (ஜூலை 31) தீர்ப்பை அறிவித்தார்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ''மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை'' என நீதிபதி தெரிவித்துள்ளார்.














மேலும்
-
பண மோசடி வழக்கு; அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் எரித்துக்கொலை; குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
-
ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்
-
சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்
-
ஆஸ்திக சமாஜத்தின் சார்பில் ஸ்ரீ மஹா ருத்ரம் நாம சங்கீர்த்தனம் துவக்கம்
-
வனத்துறை அலுவலகத்தில் விசாரணை: கைதி மர்ம மரணம்