சுப்ரீம் கோர்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தலைமை நீதிபதியை மையமாகக் கொண்ட நீதிமன்றமாக இருக்கக்கூடாது என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார்.
டில்லியில் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டுவிழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது:
சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தலைமை நீதிபதியை மையமாகக் கொண்ட நீதிமன்றமாக இருக்கக்கூடாது.
ஏனெனில் தலைமை நீதிபதி சமமானவர்களில் முதன்மையானவர்.
சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களின் நீதிமன்றமாக இருக்க வேண்டும் என்று தான் எப்போதும் நான் நினைப்பேன்.
ஜனநாயக செயல்பாட்டில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நாம் எடுக்கும் எந்த முடிவுகளும் முழு நீதிமன்றத்தின் முடிவுகளாகும்,
கடந்த பல ஆண்டுகளில் மே 26 முதல் ஜூலை 11 வரையிலான பகுதி வேலை நாட்களில் சுப்ரீம் கோர்ட், அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது.
இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது பாரம்பரிய கோடை விடுமுறைகளை பகுதி நீதிமன்ற வேலை நாட்களாக மாற்றிவிட்டது.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், கடந்த பல ஆண்டுகளில் பகுதி வேலை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை தீர்த்து வைத்துள்ளோம்.
வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் எப்போதும் தனக்கு மிகுந்த அன்பையும் பாசத்தையும் அளித்துள்ளனர்.
உண்மையில், வழக்கறிஞர் சங்கத்தையும் நீதிமன்றத்தையும் நீதி நிர்வாக அமைப்பையும் சம பங்குதாரர்களாக நான் எப்போதும் கருதி வருகிறேன்.
அவர்கள் நீதி நிர்வாக நிறுவனத்தின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள்.
இவ்வாறு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.



மேலும்
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு
-
செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாக்கிற்கு அதிர்ச்சி
-
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை : அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
-
டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
-
ஊழல் குற்றச்சாட்டு: லிதுவேனியா பிரதமர் திடீர் ராஜினாமா