ஊழல் குற்றச்சாட்டு: லிதுவேனியா பிரதமர் திடீர் ராஜினாமா

வில்னியஸ்: ஊழல் குற்றச்சாட்டு காரணமாக லிதுவேனியா பிரதமர் ஜின்டாடஸ் பலுக்காஸ் இன்று ராஜினாமா செய்தார்.

ஐரோப்பிய பால்டிக் பகுதியில் உள்ள நாடு லிதுவேனியா. பழைய சோவியத் யூனியன் நாடான இங்கு கடந்த ஆண்டு அக்டோபரில் பார்லிமென்ட் தேர்தலுக்குப் பிறகு சமூக ஜனநாயகக் கட்சியின் ஜின்டாடஸ் பலுக்காஸ் பிரதமராக தேர்வானார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான விசாரணை மற்றும் போராட்டங்களுக்கு பின்னர் இன்று அவர் ராஜினாமா செய்தார்.
இந்த தகவலை லிதுவேனியா அதிபர் கீதானாஸ் நவுசேடா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement