பாக்., தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

மும்பை: பாகிஸ்தான் தலைவர்களின் மொழியை, ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்துவதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
நீண்ட அமளிகளுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஜுலை 29) லோக் சபாவில் நடந்த விவாதத்த்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் இருப்பதாகவும், மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார்.
இன்று ராஜ்யசபாவில் காங்கிரஸின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆபரேஷன் சிந்தூர் குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது; பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் பற்றி முழு உண்மையை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவை வெறுப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?. காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்களின் மொழியையே பயன்படுத்துகிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு
-
செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாக்கிற்கு அதிர்ச்சி
-
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை : அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
-
டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
-
ஊழல் குற்றச்சாட்டு: லிதுவேனியா பிரதமர் திடீர் ராஜினாமா