கனமழை, வெள்ளம் பாதிப்பால் சீனாவில் 44 பேர் பலி

2

பீஜிங்: சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, 44 பேர் உயிரிழ்ந்தனர், 9 பேர் மாயமாகினர். சாலைகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பெய்ஜிங்கின் வடக்கு மலை மாவட்டங்களான மியுன் மற்றும் யாங்கிங்கில் தான் உயிரிழப்புகள் அதிகம். கடந்த வாரம் கனமழை தொடங்கியது. அதனை தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் பேரழிவுகளுக்கு மத்தியில் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி முன்னெச்செரிக்கையாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளத்தால் 31 சாலைப் பகுதிகள் சேதமடைந்தது.136 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement