இந்தியா மீதான புதிய வரி விதிப்பு; ஆக.,7க்கு தள்ளி வைத்தார் டிரம்ப்

14


வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பு இன்று அமலுக்கு வர இருந்த நிலையில், ஆக., 7ம் தேதி அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு தெரிவித்து வந்த டிரம்ப், இந்தியா மீது 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பு ஆக.,1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரது இந்த அறிவிப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள மத்திய அரசு, இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே, 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 10 சதவீதம் முதல் 41 சதவீதம் வரையில் புதிய வரிகளை விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதில், அதிகபட்சமாக சிரியாவுக்கு 41 சதவீதமும், குறைந்தபட்சமாக பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு 10 சதவீத வரிகளும் விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனியே,இந்த வரிவிதிப்பை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பை அடுத்த ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதாவது, ஆக.,7ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வரிவிதிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமெரிக்கா புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Advertisement