ஆண்கள் மட்டும் வழிபடும் விழா வரும் 3ல் கிடா வெட்டி விருந்து
நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா வரும், 3ம் தேதி நடக்கிறது. அன்று இரவு கிடா வெட்டி விருந்து வைக்கப்படுகிறது.
ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து மலையாம்பட்டி கிராமத்தில், மலைவாழ் மக்களின் தெய்வமான பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை, பொங்கல் விழா நடப்பது வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறினால், கிடா வெட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொங்கல் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு, கிடா பலியிட்டு பூஜை செய்வதுடன் அசைவ அன்னதானமும் வழங்குவர்.
இந்தாண்டு பொங்கல் விழா வரும், 3ம் தேதி நடக்கிறது. அன்று இரவு பொங்களாயி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கிடா கொடுப்பர். 4ம் தேதி அதிகாலை அசைவ அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா அபாரம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஆல் அவுட்
-
மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!
-
இந்தியர்களிடம் ரூ.23 ஆயிரம் கோடி திருடிய சைபர் கிரிமினல்கள்
-
மாவட்ட பாஜ அலுவலக வளாகத்தில் புதைத்த நாய் தோண்டி எடுப்பு!
-
மாணவியரின் ஆடிப்பெருக்கு...
-
டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பில் சிக்கிய 70 நாடுகள்; இதோ முழு பட்டியல்