மாவட்ட பாஜ அலுவலக வளாகத்தில் புதைத்த நாய் தோண்டி எடுப்பு!

தேனி; தேனியில் மாவட்ட பாஜ அலுவலகத்தில் புதைக்கப்பட்ட நாயின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் மாவட்ட பாஜ அலுவலகம் உள்ளது. அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர் உள்ளன. நேற்று மாலை கட்டடத்தின் பின்னால் வலதுபுறம் மூலையில் நாய்கள் மண்ணை கிளற, துர்நாற்றம் வீசியது. அதன் பின்னர் எதுவோ புதைக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் அளித்த தகவலின் பேரில் தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையில் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு இறந்த நாய் துணியில் சுற்றி உப்பு, செவ்வந்திப் பூக்களுடன் புதைக்கப்பட்டிருந்தது. புதைத்து 3 நாட்கள் ஆகிய நிலையில் சடலத்தை தோண்டி எடுத்தனர். தேனி போலீசார் விடியோ பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு
Advertisement
Advertisement