மாணவியரின் ஆடிப்பெருக்கு...


நீர் நிலைகளை வணங்கும் ஆடிப்பெருக்கு திருவிழா நமது கலாச்சாரத்தில் முக்கியமானதாகும்.
Latest Tamil News
இதனை முதன்மைப்படுத்தி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லுாரி மாணவியர்கள் ஆடிப்பெருக்கு விழாவினை முன்கூட்டியே கொண்டாடுவது வழக்கம்.
Latest Tamil News
இந்த வருடமும் இன்று கொண்டாடினர்.

பொய்க்கால் குதிரை,ஒயிலாட்டம்,கரகாட்டம்,புலியாட்டம்,மயிலாட்டம்,சிலம்பாட்டம் உள்ளீட்ட பல்வேறு ஆட்டங்களில் மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
Latest Tamil News
நிகழ்விற்கு சிகரம் வைத்தது போல பராம்பரிய உடையில் விளக்கேந்தி வந்து கல்லுாரி வளாகத்தினுள் உள்ள நீர் நிலையில் அந்த விளக்குகளை விட்டு வணங்கி மகிழ்ந்தனர்.
Latest Tamil News
நமது பண்பாட்டை பராம்பரியத்தை இளவயதிலேயே சொல்லிக் கொடுப்பது என்பது நல்ல விஷயம் அதை இந்த கல்லுாரி செய்தது இன்னும் சிறப்பான விஷயமாகும் இந்த விஷயத்தை மற்ற கல்லுாரிகளும் பின்பற்றலாமே..
Latest Tamil News
படங்கள்:யுவராஜ்.

Advertisement