அமைச்சர் தொகுதியில் பள்ளி மாணவர்கள் தற்கொலை

பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் தொகுதியான, திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில், பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்துள்ளார். இதே பள்ளியில், கடந்த ஜூனில், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்தார்.

இந்த பள்ளி, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டு, தமிழகம் முழுதும் இருந்து மாணவ - மாணவியர், அரசு விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

இங்கு, அடுத்தடுத்து இரண்டு பேர் தற்கொலை செய்தது, பல கேள்விகளை எழுப்புகிறது. இது குறித்து விசாரித்து, இத்தகைய துயரங்கள் தொடராமல் தடுக்க வேண்டும். கடந்த ஜூனில் மாணவி தற்கொலை செய்தது பற்றிய விசாரணை, எந்த அளவில் இருக்கிறது என, அமைச்சர் மகேஷ் பதில் அளிக்க வேண்டும். மாணவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்த விபரங்களையும் தெரிவிப்பது, அமைச்சரின் கடமை.

- அண்ணாமலை,

முன்னாள் தலைவர்,

தமிழக பா.ஜ.,

Advertisement