ஏ.டி.எம்.,மில் திருட முயற்சி

பல்லாரி: பல்லாரி நகரின் தாளூரு சாலையில் ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி நடந்தது.

பல்லாரி நகரின், தாளூரு சாலையில் ஒரு வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருட முயற்சி நடந்தது, நேற்று காலை தெரிய வந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.

இதே சாலையில் இருக்கும் ஒரு மளிகைக்கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளை மர்ம நபர்கள் நேற்று முன் தினம் இரவு ஆட்டோவில் துாக்கிச் சென்றனர்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ எண்ணை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

திருடர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலே, ஏ.டி.எம்.,மிலும் திருட முயற்சி செய்ததா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement