செக் போஸ்ட்

மாற்றமா, ஏமாற்றமா?

மா நிலத்தின் சூரிய கட்சி நோயாளி போல குழப்பம், குளறுபடியாகவே, இருந்து வருதாம். இதன் பேரில் ஏகப்பட்ட புகார் கோப்புகள் போயிருப்பதாக சொல்றாங்க.

இதை சரிப்படுத்த இம்மாதம் 4ம் தேதி சென்னை அறிவாலயத்தில் ட்ரீட்மெண்ட் தருவதாக அழைத்திருக்காங்க.

கோல்டு சிட்டியிலும் கூட கோஷ்டி சிக்கலால் பலவீனமாக இருப்பதாக தெரியவந்திருக்கு.

அதனால் அவங்களுக்கும் டானிக் தரனுமாம். இதில், இரு கோஷ்டியில், ஒரு தரப்பினரை மட்டுமே, அழைத்திருப்பதாக சொல்றாங்க. இரு தரப்பினரையும் அழைத்து பேசினால் தானே, குழப்ப நோய் தீரும்.

மாநில சூரிய கட்சிக்கு புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்போவதாக சென்னை ஹெட் ஆபீஸ் தகவல், மாநில கேபிடல் சிட்டியில் பரவி இருக்குது. சென்னை அழைப்பு யாருக்கு மாற்றம், யாருக்கு ஏமாற்றம் தெரியலையே.



நேற்றோடு காணவில்லை...!

இ ருப்பதை எல்லாம் மூடுவதற்கு கோல்டு சிட்டியில் வழக்கமா போச்சு. தேசிய சுரங்க பாதுகாப்பு நிலையம், புகழ்பெற்ற கம்பெனி ஆஸ்பிடல், மகப்பேறு மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு பதிவு நிலையம், ஊர்க்காவல் படை அலுவலகம் மூடப்பட்டு பல வருஷம் ஆனது.

தீயணைப்பு படையின் வாகனம் இல்லாமல் போயி வருஷத்தை தாண்டுது. பேமஸான பல பள்ளிகள் மூடு விழா கண்டுவிட்டன. பாதுகாப்புக்கு இருந்த சாம்பியன், மாரிகுப்பம் காக்கி ஆபீசும் காணாமல் போச்சு.

இந்த பட்டியலில் அடுத்து என்.ஐ.ஆர்.எம்., என்ற நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ராக் மெக்கானிசம் ஆபீசும் இடம் பெயர, அங்குள்ள கருவிகள் ஒவ்வொன்றாக ஷிப்ட் ஆகி வருது.

இதெல்லாம் கோல்டு சிட்டியை அழிக்கும் ஆபத்தென அச்சம் ஏற்பட்டிருக்குது.

இந்த வரிசையில் மக்கள் பயன்பாட்டில் இருந்த மின் கட்டணம் செலுத்த வசதியாக இருந்த ரா.பேட்டை, ஆ.பேட்டை ஆகிய 2 இடங்களில் அதோட கவுண்டர்களை நேற்றோடு மூடிட்டாங்க.

வேறென்னல்லாம் மறைய போகுதோ. இதெல்லாம் ஜனங்க மத்தியில் அதிருப்தியா வெளிப்படுது.



தேர்தல் நடக்கும்... ஆனா நடக்காது...!

ச ட்டம் பேசும் சங்கத்துக்கு ரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாக தேர்தல் நடத்த வேண்டும். இது சட்டத்தை துதிக்கிற, மதிக்கிறவங்களோட கோட்பாடு.

2021 ஆகஸ்ட் 1ல் நடந்த தேர்தலுக்கு பிறகு 2023 ஆகஸ்ட் 1க்குள் அடுத்த தேர்தலை நடத்தி இருக்கணும். 2023 ஆக.1ல் தேர்தல் நடந்திருந்தால் 2025 ஆகஸ்ட் 1ல் அதன் பதவிக்காலம் முடிந்திருக்கும். நேத்து புதிய நிர்வாக தேர்தலை நடத்தி இருக்கணும்.

ஆனா, 2021ல் இருந்து தேர்தலே நடத்தலயாம். தேர்தலே வேணாம்னு கருப்பு கோட்டுக்காரங்க சொல்றாங்களா அல்லது சங்க சட்ட தேர்தல் விதிமுறைகளை மாற்றி திருத்திட்டாங்களா.

அல்லது சங்கம் பேர்ல யாருக்கும் ஆர்வமே இல்லையா. இருக்கிறவங்களே இருந்து போகட்டும்னு கண்டுக்கலையா. என்னதான் நடக்குதோன்னு சீனியர்கள் 'தமாஷா' வேடிக்கை பாக்றாங்க போல.



குறைகிறது சிட்டியின் மதிப்பு !

கை கட்சியில் சிட்டி தலைவரை விட கிராமத்து காரருக்கு தான் அரசு தரப்பு பதவியும் மாத வருமானமும் கிடைக்க அசெம்பிளி மேடம் ஆவன செய்திருக்காங்க.

ஆனால் சிட்டியோட தலைவருக்கு உரிய 'மதிப்பு' கூடியிருக்கா குறைந்திருக்குதான்னு அவரே சுய பரிசோதனை செய்து பார்க்கணுமாம்.

கட்சியின் மூத்த ஆளுங்கள தேடி பார்த்தாலும் கிடைப்பது அரிதாகி விட்டதாக தெரியுது. மிக சின்சியர், சீனியர், சிட்டிக்காரரை பல நிகழ்வுகளில் காண கிடைப்பதில்லை.

முனிசி., உறுப்பினராக இருப்பவங்க தான் முக்கியம்னு அதிகாரம் உள்ளவங்களுக்கு நினைப்பு இருக்கு. ஆனால், அக்டோபர் 20ல் அவங்க பதவி காலாவதி ஆக போகுது. அதுக்கப்புறம் அவங்க யாரோடு யார் நிப்பாங்க. ஒதுங்கி ஓடுவாங்க. அப்போது தான் ஒரிஜினல் யார் என்பது புரிய போகுது.

கிராமத்து கைகாரர்கள் தான் தொகுதியின் துாண்கள் என மதிக்கிறாங்க. ஆனால் சிட்டிக்காரர்களை எந்தளவு தராசில் உள்ளார்கள் என்பது போக போகத்தான் தெரியும்னு புதிர் போட்டு சில அறிவு ஜீவிகள் அலசுறாங்க.

Advertisement