'மகன் தி.மு.க., ஆகிவிட்டது ம.தி.மு.க.,'

2

சென்னை:ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா கூறியதாவது:

உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க, சென் னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. ம.தி.மு.க., என்பது விலகி, 'மகன் தி.மு.க.,' என, சுருங்கிப் போனது துரதிரு ஷ்டம்.

துரோக பட்டத்தை சுமத்தி, ஒவ்வொரு காலகட்டத்திலும், கட்சியின் பொதுச்செயலர் வைகோ தொடர்ந்து வெளியேற்றி வந்தார். தன் மகன் துரையின் அரசியலுக்காக, என் மீது அபாண்டமான, தீராத துரோக பழி சுமத்தியதை, ம.தி.மு.க.,வினர் நம்பவில்லை. உட்கட்சி ஜனநாயக படுகொலைக்கு நீதி கேட்போம்; வாருங்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement