டிரம்ப் வரி விதிப்பு விவகாரத்தை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி: யு.ஏ.இ., அதிபருடன் மோடி பேச்சு!

17


புதுடில்லி: இந்தியப்பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.


உலகின் அனைத்து நாடுகளுடனும் வம்பிழுத்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது இந்தியப்பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் டிரம்ப், அந்த வர்த்தகத்தை கைவிடுமாறு, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முறை எச்சரிக்கை விடுத்தார்.
அதற்கு இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில், இப்போது இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சமாளிப்பது குறித்து மத்திய அரசு, தொழில் வர்த்தகத்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகம் எனப்படும் யு.ஏ.ஓ., நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி போனில் பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அப்போது இந்தியாவின் நீண்ட கால பிரதமராக 2வது இடத்தில் இருக்கும் மோடிக்கு, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு வரி விதித்து வரும் டிரம்ப் நடவடிக்கை, அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள், அதை சமாளிக்க என்ன செய்வது என்று இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.



பாகிஸ்தானில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ள நிலையில் யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தியது முக்கியத்துவம் பெறுகிறது.

யு.ஏ.ஓ., மட்டுமின்றி, சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி, நெருக்கமான தொடர்புகளை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement