'சமூக நீதி விடுதி' என பெயர் மாற்றக்கூடாது: பார்வர்டு பிளாக் 

சிவகங்கை : தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லுாரி விடுதிகளை 'சமூக நீதி விடுதி' என அழைக்கும் உத்தரவை வாபஸ் வாங்க கோரி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என, அகில இந்திய பார்வார்டு பிளாக் பொதுச்செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது:



தமிழகத்தில் கள்ளர் சீர்மரபினர், ஆதிதிராவிடர், பட்டியலின, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழக அளவில் 2,738 பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகள் அனைத்தையும், 'சமூக நீதி விடுதி' என அழைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதை சமூக நீதி ஒதுக்கீடு எனக்கூறி நீக்க முடியுமா?

முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து, விடுதிகளுக்கு 'சமூக நீதி விடுதி' என பெயர் வைத்ததை வாபஸ் பெற கோரிக்கை வைக்க உள்ளோம். இது குறித்து, பல மாவட்டங்களில் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு கதிரவன் கூறினார்.

Advertisement