'உங்களுடன் ஓர் நாள்' நிகழ்ச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., நியமன எம்.எல்.ஏ., செல்வம், தொகுதி மற்றும் கிளைகளை பலபடுத்தும் நோக்கில் நிர்வாகிகளுடன் 'உங்களுடன் ஒர் நாள்' கலந்தாய்வு நிகழ்ச்சியை துவக்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சி, லாஸ்பேட்டையில், தொகுதி தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் ரமணாஷங்கர், தொகுதியின் பொறுப்பாளார் செல்வாஸ் அசோகன், வர்த்தக பிரிவு மாநில முன்னாள் அமைப்பளார் நமச்சிவாயம், அமைப்புசார பிரிவின் அமைப்பாளார் சந்துரு முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ., செல்வம் நிர்வாகிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கிளைகள் தோறும் வலிமை படுத்துவது, தேர்தலில் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னாள் மாநில செயலாளர் லதா, மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், தொகுதி பொதுசெயலாளர் அருண் அப்பாதுரை, பாலன், குமார், கிளை தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement