மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா விழிப்புணர்வு பயிலரங்கம்

புதுச்சேரி : மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுமை பிரிவு, புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து 'டிஜிட்டல் இந்தியா பேச்சு நிகழ்ச்சி' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.

புதுச்சேரி பல்கலை துணை வேந்தர் பிரகாஷ்பாபு, தலைமை தாங்கி, 'டிஜிட்டல் இந்தியா திட்டம், டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட சமூகத்தையும், அறிவுசார் பொருளாதாரத்தையும் உருவாக்குவதற்கான மாற்றத்திற்கு மிக முக்கிய பங்காக உள்ளது' என்றார்.

தொடர்ந்து, மேலாண்மை புல முதன்மையர் நடராஜன், நிர்வாக துறையில் டிஜிட்டல் இந்தியாவின் பங்களிப்பு பற்றியும், பேராசிரியர் அருள், கணினி மைய தலைவர் ஜெயக்குமார் ஆகியோர், டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகள் பற்றி விளக்கமளித்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

தொடர்ந்து, டிஜிட்டல் இந்தியா வினாடி வினா போட்டி நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கணினி மைய தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Advertisement