மினி பஸ் சேவை

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் இருந்து தீவளூர் வழியாக கருவேப்பிலங்குறிச்சிக்கு மினி பஸ் சேவை துவக்க விழா நடந்தது.

பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார்.

ஒன் றிய செயலாளர் செம்பியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மினி பஸ் சேவையை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

ராமு நன்றி கூறினார்.

Advertisement