ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி: 7.5 சதவீதம் அதிகம்

புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு(2024) ஜூலை மாதம் வசூலான 1.73 லட்சம் கோடியை விட 7.5 சதவீதம் அதிகம் ஆகும்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாத்தை விட இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 3 மாதத்தில் மட்டும் ரூ.8,18,009 கோடி கிடைத்துள்ளது.
2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து, 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரலாற்றில், கடந்த ஏப்ரல் அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு
-
உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்
-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
-
கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
-
கடலுாரில் 100.2 டிகிரி வெயில் பதிவு